மூணு பேருக்குமே பாட்டு ரெடியா இருக்கு ! கவின்,சாண்டியின் கலகலப்பான ப்ரோமோ
By Aravind Selvam | Galatta | August 11, 2019 15:45 PM IST
சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் லாஸ்லியா காப்பாற்றப்பட்டதாக கமல் தெரிவிக்கிறார்.அடுத்து சாண்டி மற்றும் கவினிடம் வெளியேறுபவர்களுக்கு பாடல் ரெடியா என்று கேட்க அவர்கள் மூன்று பேருக்கும் பாடல் ரெடியாக வைத்துள்ளதாக தெரிவித்தனர்.