கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து கார்த்தி மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வந்தார்.அடுத்ததாக இரும்புத்திரை,ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார்.ஜீ.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய ,ரூபன் படத்தின் எடிட்டிங் வேலைகளை செய்கிறார்.பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்றும் ரஜிஷா விஜயன்,ராஷி கண்ணா,சிம்ரன் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த படத்தின் மோஷன் போஸ்ட்ர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது என்ற தகவலை படத்தின் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.