ஜோஷுவா இமை போல் காக்க படத்தின் ஹே லவ் பாடல் வெளியானது !
By Sakthi Priyan | Galatta | February 29, 2020 16:46 PM IST

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இவர் இயக்கிய துருவ நட்சத்திரம் படமும் தள்ளிப்போய்கொண்டே இருந்த நிலையில், இளம் ஹீரோ வருண் வைத்து ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் ஜோஷுவா இமை போல் காக்க என தலைப்பிடப்பட்டது. கௌதமின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒன்றாக எண்டர்டைன்மெண்ட் பேனரில் தயாரித்தார். தற்போது, இப்படத்தை வேல்ஸ் ஃபில்ம் இண்டர்னேஷனல் சார்பாக ஐசரி கனேஷ் வெளியிடுகிறார். வருணுக்கு ஜோடியாக ராஹீ கதாநாயகியாக நடிக்கிறார். கார்த்திக் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது படத்திலிருந்து ஹே லவ் பாடல் வெளியானது. கார்த்திக் மற்றும் சாஷா திருப்பதி இந்த பாடலை பாடியுள்ளனர். விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.