அட்டகத்தி தினேஷ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது
By Sakthi Priyan | Galatta | August 20, 2019 13:00 PM IST

பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து நீலம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் அடுத்ததாக தயாரிக்கும் படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு.
இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக ஆனந்தி, ரித்விகா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கிறார்கள். மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்குகிறார்.
தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ஈர்த்து வருகிறது.