இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளிவந்த மேயாத மான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா. இந்தப் படத்தில் நாயகன் வைபவின் தங்கையாக நடித்த இந்துஜா அறிமுகப் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்துஜா இப்போது தளபதி விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

indhuja

superduper

இந்நிலையில் இந்துஜா, சூப்பர் டூப்பர் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் துருவ் ஹீரோவாக நடிக்கிறார். பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேரன் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பல குறும்படங்களை இயக்கியிருக்கும் ஏகே இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு சுந்தர்ராம் ஒளிப்பதிவு செய்ய, திவாகர் தியாகராஜன் இசையமைத்திருக்கிறார்.

superduper

superduper

superduper

indhuja

ட்ரைலரை தொடர்ந்து தற்போது ப்ரோமோ காட்சி வெளியானது. கீழ் உள்ள லிங்கில் ப்ரோமோ காட்சியை காணலாம்.