சன் டிவியில் ஒளிபரப்பான செம ஹிட் தொடர்களில் ஒன்று கோலங்கள்,தேவயாணி ஹீரோயினாக நடித்த இந்த தொடர் பலரது Favourite தொடராக இன்றும் இருந்து வருகிறது.1500 எபிசோடுகள் வெற்றிகரமாக தனது ஒளிபரப்பை செய்தது இந்த தொடர்.

இந்த தொடரை திருச்செல்வம் இயக்கியிருந்தார்.மெட்டிஒலி தொடரில் உதவி இயக்குனராக இருந்து அந்த தொடரில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்திருந்தார் திருச்செல்வம்.இதனை தொடர்ந்து இவர் இயக்கிய கோலங்கள் தொடர் பெரிய வெற்றியை பெற்றது.இந்த தொடரிலும் நடித்து அசத்தியிருப்பார் திருச்செல்வம்.

இதனை தொடர்ந்து சித்திரம் பேசுதடி,மாதவி,பொக்கிஷம் உள்ளிட்ட சூப்பர்ஹிட் தொடர்களை இயக்கியிருந்தார்.சில வருடங்களுக்கு பிறகு திருச்செல்வம் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சிங்கப்பெண்ணே என்ற தொடரை இயக்கவுள்ளார்.இந்த தொடரில் வரலாறு,எதிரி உள்ளிட்ட படங்களில் நடித்த கனிகா நாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

தற்போது இந்த தொடரின் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாகவும் , இந்த தொடரில் ஹரிப்ரியா இசை,பிரியதர்ஷினி,ஜெகதீஷ்,கமலேஷ் உள்ளிட்டோர் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் என்ற தகவலும் சில ஷூட்டிங் ஸ்பாட் புடைபடங்களும் வைரலாகி வருகின்றன.

View this post on Instagram

A post shared by 𝗦𝘂𝗻 𝗧𝘃 𝗙𝗮𝗻 𝗣𝗮𝗴𝗲 (@suntvfans_media)