ஜீவா நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜிப்ஸி. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நடாஷா சிங் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். குதிரை வைத்து வித்தை காட்டும் கலைஞராக நடித்துள்ளார் நடிகர் ஜீவா. 

gypsy gypsy

இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்ளும் நாடோடியின் கதை என்று கூறப்படுகிறது. அப்போது நடக்கும் அரசியல் பிரச்சனைகளால் அவனுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதை எப்படி சரி செய்கிறான் என்பதே இந்த படத்தின் கதைக்கரு. ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு A சான்றிதழ் தணிக்கை குழுவால் வழங்கப்பட்டுள்ளது.   

gypsy gypsy

படத்தின் பாடலை தொடர்ந்து இரண்டாம் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. இந்த காட்சிகள் சென்சாரில் தடை செய்யப்பட்டதாகும். மார்ச் 6-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.