தமிழ் திரையுலகில் வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ் குமார். இசையமைப்பாளர் மட்டும் அல்லாது சீரான நடிகராகவும் உருவெடுத்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து ஹாலிவுட் படமான ட்ராப்சிட்டி படத்தில் நடித்துள்ளார். 

gvprakash

தற்போது கொரோனா வைரஸ் நம்மை பாதிக்காமல் இருக்க தடுத்துக் கொள்ள முடியும். அதற்கு நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வீடியோ வாயிலாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

GVPrakash

இவரது இசையில் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவி படத்திற்கு இசையமைத்து வருகிறார். இவரது நடிப்பில் ஜெயில், ஐங்கரன், காதலை தேடி நித்தியாநந்தா போன்ற படங்கள் உள்ளது.