தமிழின் முன்னணி சேனல்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது கலர்ஸ் தமிழ்.இவர்களது நிகழ்ச்சிகளும்,சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் விரைவில் கவனம் ஈர்த்து தனி ரசிகர் பட்டாளத்தை பெற்று வருகிறது.இவர்கள் தொலைக்காட்சியில் பணியாற்றும் பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களாக மாறி வருகின்றனர்.

ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு அவ்வப்போது புதிய நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களையும் கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பி வருகின்றனர்.தற்போது கலர்ஸ் தமிழ் தங்கள் சேனலில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் குறித்த ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர்.

லொள்ளு சபா தொடரின் மூலம் புகழ்பெற்ற ஜீவா இந்த தொடரின் ஹீரோவாக நடித்துள்ளார்.பல சினிமா நடிகைகளும் சீரியல்களில் என்ட்ரி கொடுத்து கலக்கி வருகின்றனர்.அந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளவர் Shritha shivadas.

இவர் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு 2 படத்தின் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்தார்,இந்த தொடரின் ஒளிபரப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த அறிவிப்பு ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்