ஹிந்தியில் வெளியாகி ஹிட் அடித்த விக்கி டோனார் ரீமேக் தமிழில் தாராள பிரபு என உருவாகியுள்ளது. ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் தான்யா ஹோப் நாயகியாக நடிக்கிறார். ஹீரோ பணத்திற்காக விந்தணுவை தானம் செய்பவர் என்பது தான் கதைக்கரு. கிருஷ்ணா மாரிமுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.

harishkalyan dharalaprabhu

ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தில் சின்ன கலைவானர் நடிகர் விவேக் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 8 இசையமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இசையமைக்கவுள்ளனர். விவேக் - மெர்வின், பிரதீப் குமாரின் ஊர்கா இசைக்குழு, இன்னொ கெங்கா, ஷான் ரோல்டன், பரத் ஷங்கர், கபேர் வாசுகி, அனிருத், மேட்லீ ப்ளூஸ் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். 

vivekh harishkalyan

இதனைத்தொடர்ந்து படத்தின் மூன்றாம் பாடலான ராசா மவன் பாடல் வெளியானது. ஸ்டாண்ட் அப் காமெடியன் அலெக்ஸ் மற்றும் ஹரிஷ் வெங்கட் பாடிய இந்த பாடல் வரிகளை சூப்பர் சுப்பு எழுதியுள்ளார்.