கோமாளி படத்தில் மியூட் செய்யப்பட்ட வார்த்தைகள் ! வீடியோ உள்ளே
By Aravind Selvam | Galatta | September 12, 2019 17:41 PM IST
அடங்க மறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து தற்போது ரிலீசாகியுள்ள படம் கோமாளி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.
Vels International Films இந்த படத்தை தயாரிக்கிறது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் கடந்த ஆகஸ்ட் 15 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பட்டி தொட்டி எங்கும் வசூல் மழை ஈட்டி வரும் இந்த படத்தின் சென்சார் செய்யப்பட்ட வார்த்தைகள் உடைய முன் பின் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இது ஒரு புதுமையான முயற்சி என்பதால் இந்த வீடியோ ரசிகர்களிடம் பிரபலமாகிவருகிறது.