சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

Bigboss Tharshan kavin Losliya

Bigboss Tharshan kavin Losliya

இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் மே 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Bigboss Tharshan kavin Losliya

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தர்ஷன் சேரனை நாமினேட் செய்துவிட்டு அழுத நீங்கள் எப்படி இறுதிப்போட்டிக்கு செல்வீர்கள் என்று லாஸ்லியாவிடம் கேட்கிறார்.அதற்கு லாஸ்லியா அவரை நாமினேட் செய்யவேண்டாம் என்று தான் இருந்தேன் ஆனால் சூழ்நிலை காரணமாக செய்ததாக கூறுகிறார்.அப்போது குறுக்கிட்ட சேரன் யாரேனும் நாமினேட்செய்ய சொன்னார்களா என்று கேட்கிறார்.