தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Bigil ReleaseDate Confusion Archana Kalpathi Tweet

Bigil ReleaseDate Confusion Archana Kalpathi Tweet

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Bigil ReleaseDate Confusion Archana Kalpathi Tweet

Bigil ReleaseDate Confusion Archana Kalpathi Tweet

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.இந்நிலையில் இந்த வருடம் தீபாவளி ஞாயிற்றுகிழமை (27 அக்டோபர்) வருவதால் இந்த படம் வெள்ளிக்கிழமை (25 அக்டோபர்) அல்லது வியாழக்கிழமை (24 அக்டோபர்) வெளியாகும் என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.

Bigil ReleaseDate Confusion Archana Kalpathi Tweet

Bigil ReleaseDate Confusion Archana Kalpathi Tweet

இது குறித்து தற்போது படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஒரு ட்வீட் செய்துள்ளார்.தயவு செய்து யாரும் ரிலீஸ் தேதி குறித்த வதந்திகளை பரப்பவேண்டாம் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு சென்சார் முடிந்த பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Bigil ReleaseDate Confusion Archana Kalpathi Tweet

Bigil ReleaseDate Confusion Archana Kalpathi Tweet

மேலும் வசூல் சாதனை புரியும் ஒரு நல்ல தேதியாக அதிவிரைவாக அறிவிப்போம் அதுவரை கொஞ்சம் பொறுமை காத்திருங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.பிகில் படத்தின் புதிய போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Bigil ReleaseDate Confusion Archana Kalpathi Tweet