தமிழ் திரையுலகின் இயக்குனர் இமயமாய் விளங்குபவர் பாரதிராஜா. கடைசியாக பாண்டிராஜ் இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார். தற்போது அவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மீண்டும் ஒரு மரியாதை. 

bharathiraja

வயதான முதியருக்கும் இளம்பெண்னுக்கும் இடையிலான கதையான இதில் நட்சத்திரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு முதலில் ஓம் (ஓல்டுமேன்) எனப் பெயரிடப்பட்டிருந்தது. இப்போது முதல் மரியாதை படத்தை நினைவுப் படுத்தும் விதமாக மீண்டும் ஒரு மரியாதை என மாற்றப்பட்டுள்ளது. NR ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சபேஷ் முரளி பின்னணி இசை பணிகளை செய்துள்ளார். 

bharathiraja bharathiraja

தற்போது படத்தின் ட்ரைலர் வெளியானது. பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.