சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரின் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் ஸ்ருதி ராஜ்.இந்த தொடரின் மூலம் மிகவும் பிரபலமான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் கிடைத்தனர்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் தொடரின் மூலம் சின்னத்திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவராக அவதரித்தார் ஸ்ருதி.

ஆபீஸ் சீரியலின் வெற்றியை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் தொடரில் நடித்தார்.இந்த சீரியலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து மீண்டும் சன் டிவிக்கு வந்தார் ஸ்ருதி ராஜ்.அபூர்வ ராகங்கள் என்ற தொடரில் நடித்து வந்தார் ஸ்ருதி.இந்த தொடர் 2018-ல் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து 2018 முதல் 2020 வரை சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அழகு சீரியலில் நடித்து வந்தார்..இந்த சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த தொடர் பாதியிலேயே கைவிடப்பட்டது.இதனை தொடர்ந்து இவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.விரைவில் ஒரு புதிய தொடருடன் என்ட்ரி கொடுப்பதாக ஸ்ருதி ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.இந்த தொடரின் பூஜை நடைபெற்றுள்ளது.இந்த தொடரின் நாயகனாக தெய்வமகள் கிருஷ்ணா நடிக்கவுள்ளார்.இந்த தொடர் குறித்த பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தொடரின் ஒளிபரப்பு தேதியை சன் டிவி விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

A post shared by Tamil Serials (@tamilserialsexpress)