தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கும் படத்தில் நடித்து வந்தார்.

Allu Arjun Trivikram

Allu Arjun Nivetha Pethuraj

Allu Arjun Pooja Hegde

பூஜா ஹெக்டே,நிவேதா பெத்துராஜ் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கின்றனர்.தபு,சத்யராஜ்,ஜெயராம் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.Haarika Hassine Creations மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Ala Vaikunthapuramulo Allu Arjun

Ala Vaikunthapuramulo Allu Arjun

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.தற்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.Ala Vaikunthapuramulo என்று இந்த படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.இந்த படம் 2020 ஜனவரி மாதம் வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.