உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இப்படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும், இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், வித்யுத் ஜம்வால், யோகிபாபு, டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு போன்ற நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். 

indian2 Indian2

ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்து கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி மேக்கப் டெஸ்ட் மற்றும் படம் எடுத்தனர். அந்த தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சில நாட்கள் முன்பு இப்படத்தின் முதல் லுக் வெளியானது, சேனாபதியை மீண்டும் கண்ட ரசிகர்கள் தெம்புடன் வரவேற்றனர்.

AishwaryaRajesh

சமீபத்தில் இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் துவங்கியது. தற்போது இந்தியன் 2 படத்திலுருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விலகுகிறார் என்ற செய்தி தெரியவந்தது. தேதி காரணமாக விலகியுள்ளார் என்பது கூடுதல் தகவல். ஐஸ்வர்யா ராஜேஷ் கைவசம் மெய், நம்ம வீட்டு பிள்ளை, கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி, க.பெ.ரணசிங்கம், வானம் கொட்டட்டும், கருப்பர் நகரம் போன்ற படங்கள் உள்ளது.