மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சம்யுக்தா மேனன்.டோவினோ தாமஸ் ஹீரோவாக நடித்த தீவண்டி படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவர் தொடர்ந்து சில சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வெகு விரைவில் ரசிகர்கள் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்தார்.

தொடர்ந்து பல வெற்றிகரமான மலையாள படங்களில் நடித்து அசத்தினார் சம்யுக்தா.சில படங்களில் டோவினோவுக்கு ஜோடியாக நடித்த சம்யுக்தா கல்கி படத்தில் டோவினோவுக்கு எதிராக வில்லி வேடத்திலும் நடித்து அசத்தியிருந்தார்.

மலையாளம் மட்டுமின்றி தமிழ் மற்றும் கன்னடத்திலும் சில படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார் சம்யுக்தா.அடுத்தகாக சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார் சம்யுக்தா.இந்த படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் சம்யுக்தா தனது போட்டோ,வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்,இந்த லாக்டவுன் நேரத்தில் உடலெடையை குறைத்து அசத்தியுள்ளார் சம்யுக்தா,தற்போது இவர் பகிர்ந்துள்ள கேரளா புடைவையுடன் இவரது தீவண்டி பட புகைப்படத்தை ஒப்பிட்டு ரசிகர்கள் செம ட்ரான்ஸ்பர்மேஷன் என்று புகழ்ந்து வருகின்றனர்