நவரசா ஆன்தாலஜி வெப்சீரிஸில் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியதர்ஷன், கார்த்திக் சுப்பராஜ், ரதீந்திரன்.R.பிரசாத், சர்ஜுன்.K.M. , கார்த்திக் நரேன், அரவிந்த் ஸ்வாமி,  பிஜோய் நம்பியார், வசந்த் என 9 இயக்குனர்கள் நவரசத்தின் 9 உணர்வுகளை உணர்த்தும் விதமாக,கித்தார் கம்பி மேலே நின்று, சம்மர் ஆஃப் 92, பீஸ், இன்மை, துணிந்த பின், ப்ராஜெக்ட் அக்னி, ரௌத்திரம், எதிரி, பாயாசம், 9 எபிசோடுளை இயக்கியுள்ளனர்.

இதில் பயத்தை உணர்த்தும் இன்மை எபிசோடில் நடித்திருக்கும் நடிகர் சித்தார்த் நவரச பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். 

மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திரா அவர்கள் எனக்கு ‘இன்மை ’ வாய்ப்பை வழங்கியபோது நான் மிக மிக மகிழ்ச்சியடைந்தேன். நவரசங்களில் ஒரு உணர்வை குறிக்கும் இன்மை என்பதின் அர்த்தம், பற்றாக்குறை அல்லது ஏதும் இல்லாதது என்பதாகும்.  இன்மை என்ற வார்த்தையைக் கேட்கும்போதே மக்களின் ஆர்வம் அதிகரிக்கும். 

COVID ஆல் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள, திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் ஒரு முன்னெடுப்பாக, இத்திரைப்படம் உருவாகியுள்ளது.  இயக்குநர்  ரதீந்திரன்  பிரசாத்    மற்றும் நடிகை பார்வதி திருவோத்து ஆகிய திறமையாளர்களுடன் இணைந்து பணியாற்றியது, ஒரு அற்புதமான அனுபவம் என்றார்.

மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் க்யூப் சினிமா டெக்னாலஜி சார்பில் ஜெயேந்திரா பஞ்சாக்ஷ்ன் இணைந்து தயாரித்திருக்கும் ஆன்தாலஜி வெப்சீரிஸ் நவரசா. வருகிற 6-ம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகிறது.