உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் மட்டும் தான் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உணவுவை அதிகமாக எடுத்துக்கொள்வார்கள். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை எரிப்பது மட்டும் மெட்டபாலிசத்தின் வேலையில்லை. உணவு செரிமானத்துக்கு  உதவுவது, இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருப்பது, உடலில் புதிய செல்களை உருவாக்குவது, உடல் வெப்பத்தை சீராக தக்கவைப்பது என நமது உடலில் மெட்டபாலிசத்தின் வேலைகள் பல இருக்கிறது. 


காரமான உணவு சாப்பிடும் போது எல்லாம் உடலில் மெட்டபாலிசத்தின் அளவு அதிகரிக்கும். காரமென்றால் மிளகாய்தூள், சில்லி சாஸ் அதிகம் சேர்ந்த உணவுகள் என கிடையாது. மிளகு , மிளகாய் போன்றவற்றை அதிகம் சேர்த்த உணவுகள் எடுத்துக்கொள்ளும் போது தான் மெட்டபாலிசம் அதிகரிக்கும். 


அடுத்தது புரதம். கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் எரிக்க எடுத்துக்கொள்ளும் ஆற்றலை விட புரதத்தை எரிக்க ஆற்றல் அதிகம் வேண்டும். அதனால் புரத உணவுகள் சாப்பிடும் போது  இயற்கையாகவே மெட்டபாலிசம் உடலில் அதிகரிக்கும். அதனால் சோயா பீன்ஸ், மட்டன், பீனட்ஸ், முட்டை போன்றவற்றை அதிக சேர்த்துக்கொள்ளலாம்.


அடுத்தது காபி. காபி அருந்துவதால் உடனடியாக உடலுக்கு மெட்டபாலிசம் கிடைக்கிறது. ஆனால் அது ஒரு 3 மணி நேரம் வரை மட்டுமே நீடிக்கும். அதேநேரம் ஒரு நாளைக்கு ஒரு அல்லது இரண்டு கப் காபி மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் எதிர்மறையான பிரச்சனைகள் ஏற்படும்.