கேரளவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்று இருக்கிறது. தங்க கடத்தல் விவகாரம், சிபிஎம் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் போதைப்பொருள் வழக்கு, சபரிமலை வழக்கு , மவோயிட்ஸ் என்கவுண்டர் தொடர்பு எதிர்ப்பு என விசயங்கள் ஆளும் கட்சியை சூழ்ந்து இருந்தது.

எதிர்கட்சி இதை வைத்தே அரசியல் களம் கண்டார்கள். இதனால் 2015 தேர்தல் போல் இல்லாமல் இந்த முறை உள்ளாட்சித் தேர்தல் தேசிய அளவில் கவனத்தைப் பெற்றன. 


கேரளத்தில் கடந்த 8,10,14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவை தேர்தலை எதிர்கொண்டன.


 514 கிராம பஞ்சாயத்துகள், 5 மாநகராட்சிகள், 11 மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் 108 வட்டார பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது இடத்தில் உள்ளது. 


இந்த நிலையில் கேரளவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்று இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் பினராயி விஜயன் , ‘’ கேரளாவை சீரழிக்க முயன்றவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. வதந்திகளை புறந்தள்ளி தங்களது அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு தலைவணங்குவதாக  என்று இருக்கிறார் முதலமைச்சர் பினராயி விஜயன் .