உலகின் தலைசிறந்த 5 கிரிக்கெட் வீரர்கள் யார் என்று “விஸ்டன் இதழ்” அறிவித்துள்ளது.

 Worlds Top 5 Cricketers

மிகவும் பிரபலமான “விஸ்டன் இதழ்” கடந்த 10 ஆண்டுகளில் உலகின் மிகச் சிறந்த 5 கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. 

 Worlds Top 5 Cricketers

இதில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடம் பிடித்துள்ளார். 2 ஆம் இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித், 3 ஆம் இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல், 4 ஆம் இடத்தில் டேல் ஸ்டெயின், 5 ஆம் இடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை எலிசி பெர்ரி ஆகியோர் இடம் பெற்றிருப்பதாக, “விஸ்டன் இதழ்” தெரிவித்துள்ளது.

 Worlds Top 5 Cricketers

விராட் கோலிக்கு தற்போது 31 வயதாகும் நிலையில், சவாலான நேரங்களில் விராட் கோலி மீண்டும், மீண்டும் எழுச்சியுடன் விளையாடுகிறார் என்று “விஸ்டன் இதழ்” புகழாரம் சூட்டி உள்ளார்.

 Worlds Top 5 Cricketers

மேலும், விராட் கோலியின் சராசரி 63 என்றும், இதில் 21 சதங்களும், 13 அரை சதங்களும் அடக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், 20 ஓவர் போட்டி, ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டெஸ்ட் போட்டி ஆகிய 3 விதமான  சர்வதேச கிரிக்கெட்டிலும், 50 ரன்களுக்கு மேல் சராசரியைக் கொண்டுள்ள ஒரே தனித்துவமான விளையாட்டு வீரர் என்றும் “விஸ்டன் இதழ்” புகழ் மாலை சூடியுள்ளது.