கேப்டன் விஜயகாந்த் மகனுக்குத் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. 

தமிழ்நாட்டின் பிரபலமான நடிகராகக் கொடிகட்டிப் பறந்தவர் கேப்டன் விஜயகாந்த். அதன்பிறகு, 
அரசியலில் அடியெடுத்து வைத்து, தேமுதிக என்னும் கட்சியைத் தொடங்கி, தன் கொடியைத் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் உயரம் வரை, மேலே பறக்கவிட்டவர். 

vijayakanth son marriage in coimbatore

தற்போது, வயது மூப்பின் காரணமாக கேப்டன் விஜயகாந்த், சற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அதனால், கட்சிப் பணிகளை அவரது துணைவியார் திருமதி பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார். அவர்களுக்கு 2 மகன்கள். 

மூத்தவர் விஜய பிரபாகரன். இளைய மகன் பெயர் சண்முகபாண்டியன். சண்முகபாண்டியன், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். விஜய பிரபாகரன், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இடம் பெற்றுள்ள சென்னை அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன்  விஜய பிரபாகரனுக்கு, திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த இளங்கோவின் மகள் கீர்த்தனா உடன் நேற்று மிகவும் எளிமையான முறையில் திருமண நிச்சாயத்தார்த்தம் நடைபெற்றது.

vijayakanth son marriage in coimbatore

இந்த நிகழ்வில், இருவீட்டார் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமண தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. குறிப்பாக, வரும் தை மாதத்தில் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, விஜய பிரபாகரனின் திருமண நிச்சாயத்தார்த்த புகைப்படம் வைரலாகி வருகிறது.