உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளி குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அதிகார போதையில் எதுவும் செய்யலாம் என்று நினைக்கும் அதிகார வர்க்கத்திற்கு, இந்த வழக்கே ஒரு சாட்டையடி! சவுக்கடி!! சாட்சி!!!

unnao rape case BJP MLA Kuldeep Sengar given life sentence by court

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டு, வேலை கேட்டுச் சென்ற 17 வயது இளம் பெண்ணை பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங், கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங்கை கைது செய்தனர். 

இதனால், எம்.எல்.ஏ. குல்தீப் சிங்கை, பா.ஜ.க.விலிருந்து அதிரடியாக நீக்கி, கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்தது. 

இதனால், ஆத்திரமடைந்த அவர், பாதிக்கப்பட்ட பெண் சென்ற காரை, லாரி மோதி விபத்துக்குள்ளாக்கினார். இந்த விபத்தில், பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண், வழக்கறிஞர் படுகாயத்துடன் உயிர் தப்பினர். ஆனால், அந்த காரில் இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தை ஏற்படுத்தியது எம்.எல்.ஏ. குல்தீப் சிங் தான் என பாதிக்கப்பட்ட மாணவி மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால், நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி உன்னாவ் பலாத்கார வழக்கு, விபத்து வழக்கு உள்ளிட்ட மொத்தம் 5 வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கு டெல்லிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 9 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. 

அதன்படி, கடந்த 20 ஆம் தேதி, இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என டெல்லி சிறப்பு நீதிமன்றம் கூறியது. மேலும், தீர்ப்பு மட்டும் ஒத்திவைக்கப்பட்டனது.

இந்நிலையில், இந்த வழக்கில் தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, குற்றவாளி குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

 unnao rape case BJP MLA Kuldeep Sengar given life sentence by court

மேலும், 2017-ம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில், ஆளும் கட்சியைச் சேர்ந்த MLAவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.