2020 ஆண்டிலேயே தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக நேற்று பதிவானது. 

தமிழகத்தில் தற்போது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் வெயில் மிக கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது.

Tamil Nadu records maximum temperature for 2020
 
நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 13 இடங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி, அதிக பட்சமான வெப்பம் பதிவானது. 

குறிப்பாக, தமிழகத்தில் இந்த ஆண்டின் மிக அதிகபட்ச வெப்ப நிலையாக, நேற்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருக்கிறது. 

மேலும்,

வேலூர் - 108.4
மீனம்பாக்கம் - 106.1
கரூர் பரமத்தி - 104.3
சேலம் - 103.6
நுங்கம்பாக்கம் - 103.2
மதுரை விமான நிலையம் - 102.9
கடலூர் - 102.5
புதுச்சேரி -102.2
தருமபுரி - 101.4
பரங்கிப்பேட்டை - 101.3

ஆகிய பகுதிகளில் வெயிலின் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. 

Tamil Nadu records maximum temperature for 2020

இதனால், நேற்று வீட்டை விட்டு வெளியே வந்த பொதுமக்கள் பலரும், வெப்பத்தின் தாக்கம் தாங்காமல் மிகவும் அவதிக்குள்ளானார்கள். சிலர், கைகளில் குடையைப் பிடித்தபடி வெளியே வந்து சென்றனர்.

அத்துடன், தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிகக் கடுமையான அனல் காற்று வீசும் என்று, ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்றுடன் அந்த 3 வது நாள் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.