"மகளிர் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளை சந்தித்தது ஏன்?"- காரணத்தை விளக்கிய Stபிரிட்டோ அகாடமி Dr விமலா ராணி! ஸ்பெஷல் பேட்டி

இன்றைய தலைமுறைக்கு தேவையான உலகத்தரமான கல்வியை மிகச்சிறந்த முறையில் வழங்கி வரும் ஆகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமாக விளங்கும் செயின்ட் பிரிட்டோ அகாடமி தற்போது 25 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்திருக்கிறது. தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக திகழும் இந்த செயின்ட் பிரிட்டோ அகாடமியின் செயலாளராக விளங்கும் டாக்டர் விமலா ராணி அவர்கள், தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் கெர்ரி இன்டெவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான சேவியர் பிரிட்டோ அவர்களின் மனைவி ஆவார். பல கல்வி நிறுவனங்களுக்கு முன்னோடியாக திகழும் இந்த செயின்ட் பிரிட்டோ அகாடமியின் செயலாளர் டாக்டர் விமலா ராணி அவர்கள் வெறும் கல்வியாளராக மட்டுமல்லாமல் சமூக ஆர்வலராகவும் மனிதநேயமிக்க சிறந்த சிந்தனையாளராகவும் பல்வேறு முன்னெடுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். 

அந்த வகையில் தனது சீக் பவுண்டேஷன் சார்பில் 25 கிராமங்களை தத்தெடுத்து அந்த கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ தேவைகள், குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பெண்களின் வளர்ச்சி என பல்வேறு நலத்திட்டங்களை கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து செய்து வருகிறார். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த Dr.விமலா ராணி அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் சிறுவர் சீர்திருத்த பள்ளி மற்றும் மகளிர் சிறைச்சாலைகளுக்கு, தான் சென்று வந்த அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து பேசிய போது, “எதனால் உங்களுக்குத் தோன்றியது அங்கு செல்ல வேண்டும் என்று சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று ஒரு சிறைச்சாலைக்கு செல்ல வேண்டும் அங்குள்ள அவர்களை சந்தித்து ஏதாவது செய்ய வேண்டும் என்று எப்படி தோன்றியது?” எனக் கேட்டபோது, 

“நீங்கள் சமுதாயத்தில் ஒரு முன்னேற்றத்தையும் ஒரு மாற்றத்தையும் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் அதை மேலோட்டமாக பார்த்தால் உங்களால் அதில் முழு ஈடுபாடுடன் செய்ய முடியாது. அதில் ஒரு ஆழமான புரிதல் உங்களுக்கு இருக்காது. நீங்கள் அங்கு முழுமையாக இருக்க வேண்டும் அவர்கள் தான் ஏதாவது செய்திருப்பார்கள் என்று நிறைய பேர் பேசுவதை கேட்டிருப்போம். ஆனால் அங்கு சென்று அவர்களுடன் இருக்கும் போது தான் தெரியவந்தது. மிகக் குறைந்த ஆட்களுக்கு அவர்கள் செய்வது தவறு என்று தெரிந்தே செய்திருந்தார்கள். நான் பார்த்தவரை நிறைய சிறுவர் சீர்திருத்த பள்ளியாக இருக்கட்டும் மகளிர் சிறையாக இருக்கட்டும் தவறை உணர்கிறார்கள். நான் தான் செய்திருக்கக் கூடாது என்று உணருகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் செய்துவிட்டு நான் ஏன் இதற்குள் வந்தேன் என்று நினைக்கிறார்கள். நான் இதை தெரியாமல் செய்து விட்டேன் என்று நினைத்து நினைத்து அவர்கள் மேற்கொள்ளும் மனக்குமுறல் மிக வலி தரும் விஷயமானது.”  என தெரிவித்துள்ளார். மேலும் தனது சாதனை பயணத்தின் பல சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட செயின்ட் பிரிட்டோ அகாடமியின் செயலாளர் டாக்டர் விமலா ராணி அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.

 

Leave a Comment