மலைவாழ் மக்களின் கைவினை பொருட்களை சந்தைப்படுத்த உதவும் சீக் ஃபவுண்டேஷன்!- St பிரிட்டோ அகாடமி Dr விமலா ராணியின் அசத்தலான பேட்டி!

மலைவாழ் மக்களின் கைவினை பொருட்களை சந்தைப்படுத்த உதவும் சீக் ஃபவுண்டேஷன்!- St பிரிட்டோ அகாடமி Dr விமலா ராணியின் அசத்தலான பேட்டி! - Daily news

தமிழ்நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான செயிண்ட் பிரிட்டோ அகாடமியின் செயலாளர் டாக்டர் விமலா ராணி அவர்கள் மலைவாழ் மக்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்த உதவி செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார். டாக்டர் விமலா ராணி அவர்களின் செயின்ட் பிரிட்டோ அகாடமி என்றும் அழியாத கல்விச் செல்வத்தை மிகச் சிறப்பாக வழங்கி தற்போது 25 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது. தனது கணவரும் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் கெர்ரி இன்டெவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான சேவியர் பிரிட்டோவுடன் இணைந்து செயின்ட் பிரிட்டோஸ் அகாடமியை நிறுவிய டாக்டர் விமலா ராணி பிரிட்டோ அவர்கள் VKAN-V சொல்யூஷன்ஸ் தலைவராகவும், கெர்ரி இண்டேவ் லாஜிஸ்டிக்ஸ் இயக்குநராகவும், எஸ்தெல் ஹோட்டல் & ரிசார்ட்ஸின் நிர்வாக இயக்குநராகவும், எஸ்தெல் ஹோம்ஸின் இயக்குநராகவும் திகழ்கிறார். வெறும் கல்வியாளராக மட்டுமல்லாமல் சமூக பொறுப்புள்ள சமூக ஆர்வலராகவும் தனது சீக் ஃபவுண்டேஷன் சார்பில் பல முக்கிய நலத்திட்டங்களையும் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த செயின்ட் பிரிட்டோ அகாடமியின் செயலாளர் டாக்டர்.விமலா ராணி அவர்கள் பல முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் தனது சீக் பவுண்டேஷன் சார்பில் தற்சமயம் 25 கிராமங்களை தத்தெடுத்து நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருவது போலவே அடுத்த கட்டமாக மலைவாழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மலை கிராமங்களை தத்தெடுத்து அதற்கான சில நலத்திட்டங்களும் செய்ய முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அதில் முதலாவதாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்  முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சில முன்னெடுப்புகளை எடுக்க இருப்பதாகவும், முதலில் கல்வியை சார்ந்து அங்கு ஒரு சின்ன முன்னேற்றத்தை அமைக்க உள்ளதாகவும்,  தெரிவித்த டாக்டர் விமலா ராணி அவர்கள், 

“வாழ்க்கை முறைகளை மேம்படுத்த வேண்டும் என்றால் முதலில் கழிப்பறைகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் அது மட்டுமில்லாமல் அடுத்த கட்டத்துக்கு நகர தேவையானவற்றையும் நாம் செய்து கொடுக்க வேண்டும். சில கிராமங்களின் பட்டியல் வந்திருக்கிறது. அந்த கிராமங்களின் அடுத்த கட்ட தேவைகளை நாம் கண்காணிப்போம் அது சிறந்த கட்டம் என்று நாம் சொல்ல முடியாது ஏனென்றால் உடனடியாக நாம் அவ்வளவு பெரிதாக எதுவும் செய்து விட முடியாது. அதனால் எங்களால் முடிந்தவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த நாங்கள் காரியங்களை முன் வைத்திருக்கிறோம் மலைவாழ் கிராமங்களுக்காக எங்கள் அடுத்த கட்டங்கள் என்றால் ஒரு சில மலைவாழ் கிராமங்களில் கைவினை பொருட்களை செய்கிறார்கள் அதை எப்படி மக்களுக்கு கொண்டு  சேர்ப்பது, சந்தைப்படுத்துவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். நாங்கள் வந்து அவர்களுக்கு அதற்கான தீர்வை கொடுக்க இருக்கிறோம். கைவினை பொருட்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க ஆன்லைனில் ஒரு தளத்தை உருவாக்கி கொடுக்க இருக்கிறோம்.  அதன் மூலம் அவர்களின் கைவினை பொருட்களை E-Commerceல் விற்பனை செய்ய உதவ இருக்கிறோம்.” என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட செயிண்ட் பிரிட்டோ அகாடமியின் செயலாளர் டாக்டர் விமலா ராணி அவர்களின் இந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

Leave a Comment