அப்பாவின் செல்போன் மூலம் காதலித்த மகன், காதலியை நேரில் பார்த்தபோது அலறித்துடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவர், மிஸ்டு கால் மூலம் ஆண் ஒருவருக்கு அறிமுகமாகி உள்ளார். இதனையடுத்து, இருவரும் அடிக்கடி போனிலேயே பேசிக்கொண்டு வந்தனர்.

Kerala youth runs after meeting lover

இந்த பழக்கம், நாளடைவில் இருவருக்குள்ளும் காதலாக மாறி, எல்லை மீறிச் சென்றது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக்கொள்ள முடிவு செய்தனர்.

அப்போது, அந்த இளைஞன் ஒரு குறிப்பிட்ட தேதியைச் சொல்லி, அந்த தேதியில் எங்கள் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். இதனால், தனது கணவரிடம் பொய் சொல்லிவிட்டு, அந்த பெண்ணும் முகம் பார்க்காத தனது காதலனைத் தேடி வெகு தூரம் வந்துள்ளார். 

Kerala youth runs after meeting lover

காதலன் சொன்ன குறிப்பிட்ட முகவரிக்கு வந்து வீட்டிற்குள் வந்துள்ளார். அங்கு, பிளஸ் ஒன் படிக்கும் இளைஞன் ஒருவர் இருந்துள்ளார். அப்போது, இந்த பெண்ணைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவன், யார்? என்ன? வென்று கேட்டுள்ளார். அந்த பெண்ணும், தன் பெயரைச் சொல்லி, குறிப்பிட்ட இந்த ஊரிலிருந்து வருவதாகப் பதில் அளித்துள்ளார்.

இதனால், பதறிப்போன அந்த இளைஞன், இந்த பெண்ணை பார்த்து அலறித் துடித்து, கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து விசாரித்துள்ளனர். அப்போது, நடந்ததையெல்லாம் அந்த பெண் ஊர் மக்களிடம் விளக்கமாகக் கூறியுள்ளார். அதற்கு “என் வயசு உள்ள பெண் என்று நினைத்துத்தான் நான் காதலித்ததாகவும்” அந்த இளைஞன் ஊர் மக்களிடம் கூறியுள்ளான்.

 Kerala youth runs after meeting lover

இதனையடுத்து, அந்த பெண்ணின் கணவரை வரவழைத்து, நடந்ததையெல்லாம் சொல்லி, அறிவுரை சொல்லி கணவருடன் அந்த பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.