இந்தி நடிகையுடனான காதலை புத்தாண்டு அன்று கிரிக்கெட் வீரர் ஹர்திக் பண்டியா உலகுக்கு அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக திகழும் ஹர்திக் பண்டியா, முதுகில் ஏற்பட்ட காயம் காரணமா அறுவை சிகிச்சை செய்து, ஓய்வு எடுத்து வருகிறார். 

hardik pandya

இதன் காரணமாக, ஹர்திக் பண்டியா கடந்த சில மாதங்களாகவே இந்திய அணியில் ஒருநாள் மற்றும் டி20 உள்ளிட்ட எந்த போட்டிகளில் இடம் பெறாமல் ஓய்வு எடுத்து வருகிறார். 

இதனிடையே, ஹர்திக் பண்டியா இந்தி நடிகை ஒருவரைக் காதலிப்பதாகக் கடந்த காலங்களில் கிசுகிசு வெளியானது. ஆனால், இது தொடர்பாக இதுவரை மௌனம் காத்து வந்த அவர் நேற்று புத்தாண்டு பிறந்த அன்று இரவு 12 மணிக்குத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் உடன் ஸ்டைலாக நிற்கும் படத்தை பதிவிட்டு, தனது காதலை உலகுக்கு வெளிக்காட்டி உள்ளார்.

hardik pandya

மேலும், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஆனதாகவும், இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதில், ஒரு புகைப்படத்தில், ஹர்திக் பண்டியா தனக்கு அணிவித்த மோதிரத்தை நடிகை நடசா காண்பிக்கிறார். 

இந்த படத்திற்கு கிரிக்கெட் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தெரிவித்துள்ளனர். சுமார் 12 லட்சம் பேர் இந்த படத்திற்கு லைக் கொடுத்துள்ளனர். இதனால், ஹர்திக் பண்டியா வெளியிட்ட இந்த புகைப்படம் டிரெண்டானது.

hardik pandya

இதனிடையே, நடிகை நடாஷா தமிழில் வெளியான “அரிமா நம்பி” படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளது குறிப்பிடத்தக்கது.