இந்தியாவின் டாப் 100 பிரபலங்கள் பட்டியலை   ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் அதிகமான மக்களைக் கவர்ந்த பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான இந்தியாவின் மிகச் சிறந்த 100 நபர்களை, ஃபோர்ப்ஸ் பத்திரிகை தற்போது வெளியிட்டுள்ளது.

Forbes magazine has published a list of India's Top 100 Celebrities

அதன்படி, முதல் இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில், பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார், சல்மான்கான், அமிதாப்பச்சன் ஆகியோர் அடுத்த‌டுத்த இடங்கள் பிடித்துள்ளனர்.

5 வது இடத்தில் தோனி இடம் பெற்றுள்ளார். 13 வது இடத்தை நடிகர் ரஜினிகாந்த்தும், 16 வது இடத்தில் ஏ.ஆர் ரகுமானும் இடம் பெற்றுள்ளனர்.

Forbes magazine has published a list of India's Top 100 Celebrities

அதேபோல், நடிகர் விஜய்க்கு 47 வது இடத்திலும், நடிகர் அஜித் 52 வது இடத்திலும் உள்ளனர். இயக்குநர் ஷங்கருக்கு 55 வது இடம் கிடைத்துள்ளது. அரசியல்வாதியாக மாறியுள்ள நடிகர் கமல் 56 வது இடம் பிடித்துள்ளார்.

Forbes magazine has published a list of India's Top 100 Celebrities

அதேபோல், விளையாட்டு வீராங்கனை பி.வி.சிந்து 63 வது இடத்தையும், நடிகர் தனுஷ் 64 இடத்திலும், இயக்குநர் சிவா 80 வது இடத்திலும், வீராங்கனை சாய்னா 81 வது இடத்தையும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் 84 இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும், விளையாட்டு வீராங்கனைகள் மேரிகோம் 87 வது இடத்திலும், மித்தாலி ராஜ் 88 வது இடத்திலும், மந்தனா 90 வது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர்.

Forbes magazine has published a list of India's Top 100 Celebrities

இதனிடையே, ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்தியர்களின் டாப் 100 பட்டியல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.