காதலனைத் தாக்கிவிட்டு காதலியை 6 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

Tamil Nadu 6 youths arrested for sexual assault on plus one schoolgirl in Coimbatore

அந்த சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த மாதம் 26 ஆம் தேதி அந்த சிறுமி, தன்னுடைய காதலன் உடன் பேசிக்கொண்டு ரோட்டில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது, அவர்களை வழி மறித்த 6 பேர் கொண்ட கும்பல், காதலனை சராமாரியாக தாக்கவிட்டு, அந்த சிறுமியை அங்கிருந்து தூக்கிச் சென்றுள்ளனர்.

Tamil Nadu three youths arrested for sexual assault on plus one schoolgirl in Coimbatore

இதனையடுத்து, மறைவான இடத்திற்குச் சென்ற பிறகு, 6 பேரும் சேர்ந்து அந்த சிறுமியைக் கதறக் கதற கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

அந்த பெண் வலியால் துடித்துள்ளார். “என்னை விட்டு விடுங்கள் என்று அவர்களிடம் மன்றாடி உள்ளார். அண்ணா.. அண்ணா.. என்று வார்த்தைக்கு வார்த்தை கூறி கெஞ்சி” உள்ளார். ஆனால், வெறிபிடித்த அந்த காமுகர் கூட்டம் அந்த சிறுமியைத் துடிக்கத் துடிக்க துன்புறுத்தி வெறித் தீரக் காம பசி ஆறியுள்ளனர். 

அந்த சிறுமியை முழுமையாக கசங்கிப் பிழிந்த பிறகே, விடுவித்துள்ளனர். உடல் முழுக்க ரத்த காயங்களுடன், அந்த சிறுமி வீடு திரும்பி உள்ளார். 

வீட்டில் தன் பெற்றோரைக் கண்டதும் அழுது அழுது வற்றித் தீர்ந்துபோன கண்ணீரெல்லாம், மீண்டும் கரை புரள ஆரம்பித்தது. அழுதுகொண்டே, தனக்கு நேர்ந்த அநியாயங்களைக் கூறியுள்ளார்.

Tamil Nadu three youths arrested for sexual assault on plus one schoolgirl in Coimbatore

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், கோவை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 27 வயதான மணிகண்டன், 26 வயதான பப்ஸ் கார்த்தி, 21 வயதான ராகுல், 32 வயதான நாராயண மூர்த்தி, 28 வயதான கார்த்திகேயன், 22 வயதான பிரகாஷ் ஆகிய 6 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்தனர்.  

மேலும், மணிகண்டன், பப்ஸ் கார்த்தி, ராகுல் ஆகிய 3 பேரும், முக்கிய குற்றவாளிகள் என்பதால், அவர்கள் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அதேபோல், மீதமுள்ள 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், மற்ற 3 குற்றவாளிகளும் அதிர்ச்சியில் உரைந்துபோய் உள்ளனர்.

இதனிடையே, பாலியல் பலாத்கார குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

தண்டனை குற்றத்தைக் குறைக்கட்டும்!