மைத்துனியை அடையத் துடித்த அக்கா கணவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

சென்னை கொளத்தூர் செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த 44 வயதான சரவணன், அப்பகுதியில் தினக்கூலியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

Chennai husband try to sister in law physical relationship

திவ்யாவின் தங்கை 19 வயதான இளம் பெண்,  ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில், திருமுல்லைவாயல் ஸ்ரீநகர் காலனியில்  தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், மனைவியின் தங்கைக்கு போன் செய்த சரவணன், “உன் அக்கா பற்றிப் பேச வேண்டும். உடனே வில்லிவாக்கம் ரயில் நிலையம் வா” என்று கூறியிருக்கிறார். 

அந்த பெண்ணும், தன்னுடைய அக்கா கணவர் தானே அழைக்கிறார் என்று நம்பி வந்திருக்கிறார்.

இதனையடுத்து மெரினா பீச்சுக்குச் சென்று பேசலாம் என்று சரவணன் கூற, அந்த பெண் மறுத்து “வீட்டிற்குச் சென்று பேசலாம்” என்று கூறியுள்ளார். 

“வீட்டில் உனது அக்கா இருக்கிறாள். அங்கு வேண்டாம்” என்று சரவணன் சமாளிக்க இருவரும் ஆட்டோவில் மெரினா கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.

ஆட்டோவில் ஏறி அமர்ந்த உடன், அந்த இளம் பெண்ணை பாலியல் ரீதியாகச் சில்மிஷம் செய்துள்ளார் சரவணன். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், மெரினாவில் வந்து இறங்கியதும், மற்றொரு ஆட்டோவை பிடித்து, நேராக அக்காட்டிற்குச் சென்று, அக்காவிடம் அழுதுகொண்டே, தனக்கு நேர்ந்த பாலியல் சில்மிஷங்கள் பற்றி கூறியுள்ளார்.

இதனையடுத்து, அக்காவும் - தங்கையும் சேர்ந்து தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்குச் சென்றதும், இனி தனது கணவருடன் சேர்ந்து வாழப்போவதில்லை என்று திவ்யா முடிவெடுத்துள்ளார்.

Chennai husband try to sister in law physical relationship

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சரவணனைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். பின்னர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.  

இதனிடையே, அக்கா கணவர் மைத்துனியை அடையத் துடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சரவணனின் அடக்க முடியாத காம வெறி, வாழ்க்கையை இழக்கச் செய்து, சிறைத் தண்டனையையும் பெற்றுத் தந்துள்ளது. 

காமம், எதையும் செய்யத் தூண்டும்!