மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை தற்போது பார்க்கலாம்.

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, காலை 11 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

budget 2020-21 highlights and summary

ஔவையாரின் ‘பூமி திருத்தி உண்’ என்ற ஆத்திச்சூடி பாடலை சுட்டிக்காட்டி நிர்மலா சீதாராமன் தனது பேச்சினை தொடங்கினார். இதன் பொருள், “ விளை நிலத்தை உழுது, அதில் பயிர் செய்து உண்” என்பதாகும்.

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் 3 விஷயங்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

- “இலக்கை நோக்கிய இந்தியா, பொருளாதார மேம்பாடு, அக்கறை கொண்ட சமூகம்” என்ற அடிப்படையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

budget 2020-21 highlights and summary

- 2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்.

- விவசாயிகளுக்காக இரயில் சேவை, விமான சேவை. 

- ரயில்வே சார்பில் விவசாயிகளுக்கான இரயில் சேவை உருவாக்கப்படும். விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பிலும் விவசாயிகளுக்கான விமான சேவை தொடங்க சாத்தியக்கூறுகள் உள்ளன.

budget 2020-21 highlights and summary

- தேசிய தடயவியல் மற்றும் சைபர் அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

- பொறியியல் படிப்பு முடித்த இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கப்படும். 

- பல்வேறு முக்கியமான நகரங்கள் தேஜஸ் ரயில் மூலம் இணைக்கப்படும்.

- சுத்தமான காற்று திட்டத்திற்கு ரூ.4150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

- கல்வி துறைக்கு 99,300 கோடி ரூபாயும், சுகாதாரத் துறைக்கு 69,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

- தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுக்கு 27,300 கோடி ரூபாயும், திறன் மேம்பாட்டுக்கு 3,000 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

- வேளாண் துறைக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

- போக்குவரத்து கட்டமைப்புகளுக்கு ரூ.1.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

- தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு ரூ.85 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

- வங்கிகள் திவாலானால் வைப்புத் தொகையில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை திருப்பி அளிக்கப்படும்.

- வங்கி டெபாசிட் காப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

- 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டிற்காக ரூ.100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

-  இயற்கை எரிவாயு இணைப்பு திட்டம்: 27,000 கி.மீ. வரை விரிவுபடுத்தப்படும்.

- நாடு முழுக்க தகவல் மைய பூங்காக்கள் அமைக்கப்படும்.

- தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

- பெண்களின் திருமண வயதை அதிகரிக்கப்படும்.

- 150 பல்கலைக்கழகங்களில் புதிய பாடப்பிரிவுகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.

- ஆசிய மற்றும் ஆப்ரிக்க மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில SAT தேர்வு அறிமுகம் செய்யப்படும்.

-  ஐடிபிஐ-யில் உள்ள அரசின் பங்குகள் விற்கப்படும்.

-  எல்.ஐ.சி. நிறுவனத்தில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளின் ஒரு பகுதி விற்கப்படும்.

- சுங்க வரிக்கான விலக்கு குறித்து வரும் செப்டம்பர் மாதம் ஆய்வு செய்யப்படும்.

- 2020-21ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10%ஆக இருக்கும்.

- ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை வருமானம் இருந்தால், வருமான வரி 20%ல் இருந்து 10%ஆக குறைப்பு.

- 5 லட்சத்திற்கு அதிகமாக ஆண்டு வருமானம் உள்ளவர்களின் வருமான வரியும் குறைக்கப்பட்டுள்ளது.

- 5 லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் வருமான வரி

- 7.5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவீதம் வருமான வரி

- 10 லட்சம் ரூபாய் முதல் 12.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வருமான வரி

- 12.5 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 25 சதவீதம் வருமான வரி

- 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி இல்லை.

budget 2020-21 highlights and summary

- ஆதார் கார்டு பயன்படுத்தி ஆன்லைனில் பான் கார்டு உடனடியாக வழங்கப்படும்.

- மூத்த குடிமக்கள் மேம்பாட்டிற்கு ரூ.9500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

- ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 30,757 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

- லடாக் யூனியன் பிரதேசத்திற்கு ரூ.5958 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

- 2022-2023க்குள் 200 லட்சம் டன் அளவிற்கு மீன் உணவுகள் சார்ந்த உற்பத்திக்கு இலக்கு.

- ஆயுஷ்மான் திட்டத்தின் படி அரசு - தனியார் பங்களிப்புடன் 2000 மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

- தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.12,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

- ஜல் ஜீவன் திட்டத்திற்கு ரூ.11,500கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

- தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்கள் பலன் அடையும்.

- ரூ.5 கோடி வரை ஆண்டு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்குத் தணிக்கை தேவையில்லை.