“அரசியலில் நுழையக்கூடாது” என்று அமிதாப்பச்சன் தனக்குக் கட்டளை போட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “தர்பார்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை மும்பையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

Amitabh Bachchan requests Rajinikanth not to enter politics

இந்த விழாவில், டிரெய்லர் வெளியிட்டப் பிறகு, விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனக்கு 3 விஷயங்களை கடைப்பிடிக்கும்படி அறிவுரைகளை வழங்கியதாகக் கூறினார்.

“முதல் விசயம், 'தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும், எப்போதும் பிஸியாக இருக்கவேண்டும்' என்று கூறிய அமிதாப், இறுதியில் 'அரசியலுக்கு வரவேண்டாம்' ” என்று கூறியதாகத் தெரிவித்தார். 

“அமிதாப்பச்சன் வழங்கிய 3 அறிவுரைகளில், முதல் 2 மட்டுமே தம்மால் கடைப்பிடிக்க முடிந்தது என்றும், 
3 வது விஷயத்தை தம்மால் கடைப்பிடிக்க  முடியவில்லை என்றும் கூறினார். இதனால், அரங்கத்தில் விசில் சத்தம் பறந்தது. ரசிகர்கள் கை தட்டி ஆர்ப்பரித்தனர்.

Amitabh Bachchan requests Rajinikanth not to enter politics

இதன் மூலம், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்பதை நடிகர் ரஜினிகாந்த், சூசகமாகத் தெரிவித்துள்ளார். தற்போது, ரஜினி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, “தர்பார்” படம் வரும் பொங்கல் விருந்தாகத் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.