ந்தவொரு வியாபாரமாக இருந்தாலும், அதை எந்தக் காலத்தில் செய்கிறோம் என்பதைப் பொறுத்துதான் அதன் வெற்றியும் தோல்வியும் அமையும். இதில் வியாபாரத்தில் காலத்தின் அவசியம் எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு எவ்வளவு இன்னவேட்டிவாக அதை விற்பனை தளத்துக்கு கொண்டு வருகிறோம் என்பதும் முக்கியம். ஏனெனில் சரியான நேரத்தில் செய்யப்படும் இன்னவேட்டிவான தயாரிப்புகளுக்கு, எப்போதுமே கிராக்கி அதிகம்! அப்படி சரியான நேரத்தில் செய்யப்பட்ட இன்னவேட்டிவ்வான ஒரு முன்னெடுப்புதான், ஹோம் மேட் மற்றும் ஃபேஸ் மாஸ்க் தயாரிப்புகள்!

கொரோனாவினால், முடங்கிப் போன எத்தனையோ விற்பனைகளை நாம் அறிவோம். இருப்பினும் இப்போதும் சுடச்சுட இயங்கிக் கொண்டிருக்கும் முக்கியமான ஒரு விற்பனை, வீட்டிலேயே தயாரிக்கப்பட்டு விற்கப்படும் மாஸ்க் வகைகள்.

பெருநிறுவண விற்பனை என்பதோடு நிற்காமல், தமிழகத்தின் கடைக்கோடிகளில் இருக்கும் சிறு சிறு சுய உதவிக் குழுக்களும்கூட இந்த விற்பனை சந்தைகளில் இறங்கி தீவிரமாக இயங்கிவருகின்றன. இதில் கவனிக்கத்தக்க விஷயம் யாதெனில், கொரோனா பரவத் தொடங்கியபோது, துணி மாஸ்க்கை மருத்துவர்களுமேகூட பரிந்துரைக்கவில்லை. ஆனால், நாள்களும் மாதங்களும் உருண்டோடியபோது, `என்ன செய்தாலும் கொரோனாவை நம்மால் தவிர்க்க முடியாது' என்ற புரிதலை அறிவியலாளர்கள் பெற்றுவிட்டனர். தவிர்க்க முடியாது என்றாலும், நம்மால் பரவுதலை இயன்ற வரை தடுக்க முடியும் என தெரியவந்தபோது, அதை நோக்கி அவர்கள் அனைவரும் இயங்கத் தொடங்கினர். அப்போதுதான், `லிவ் வித் கொரோனா' முன்னெடுப்பு உள்நுழைந்தது. அதன் ஒருபகுதியாகத்தான் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட துணி மாஸ்க் வகைகளை அனைவரும் பயன்படுத்தலாம் என்ற அறிவுரை அனைவருக்கும் வழங்கப்பட்டது.

துணி மாஸ்க் உபயோகிக்கலாம் என்றவுடன், உடைகளுக்கு ஏற்றார் போன்ற மேட்சிங் கலர் மற்றும் டிசைனிங் மாஸ்க் வகைகள்தான் முதலில் சந்தைக்கு வந்தன. அடுத்த சில நாள்களில், பிரத்யேக ஹேண்ட் டிசைன் மாஸ்க் வகைகள் வந்தன. அடுத்தபடியாக, பிரிண்டர் உதவியோடு ஹீரோக்களின் மூக்கு மற்றும் வாய்ப் பகுதிகள் பதிக்கப்பட்ட துணி மூலம் வடிவமைக்கப்பட்ட மாஸ்க் வகைகள் வந்தன. இப்போதோ, நம்மை நாமே ஃபோட்டோ எடுத்து அதை துணியொன்றில் பிரிண்ட் செய்து மாஸ்க் தயாரித்துக்கொள்ளலாம் என்ற நிலையும் வந்துவிட்டது. இந்த `சுய முகம் கொண்ட மாஸ்க்' ஐடியா, வேறு ஏதோவொரு உலக நாட்டில் உருவான யோசனையில்லை. நம்ம தமிழ் மக்களின் கிரியேட்டிவிட்டிதான் இது! ``மாஸ்க் போடும்போது, நம்ம முகம் மறைஞ்சு, ஆள் அடையாளமே தெரியாம போய்டுது. இந்த மாஸ்க் மூலமா, அந்தப் பிரச்னை ஏற்படுறதில்லை" என்கிறார்கள் இதனால் பயன்பெற்றவர்கள்! இதோடு நிற்கவில்லை நம் ஆட்களின் கிரியேட்டிவிட்டி. திருமணம் போன்ற மங்கள் காரியங்களில் பங்குபெறும்போது அணிவதற்கென்று, காஸ்ட்லி பட்டு மாஸ்க் சிலவும் தயாரிக்கப்பட்டுவருகின்றன. 

இப்படி எத்தனையோ மாஸ்க் இருந்தாலும், பலரும் மாஸ்க் அணியாமல் இருக்கின்றனர். ஆனால் மாஸ்க், கொரோனாவை தடுக்க உதவும் முக்கியமான ஆயுதமென மருத்துவர்களால் கூறப்படுகிறது. ஆகவே மாஸ்க் அணியாமல், மேலும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்தால் என்ன என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

ரமேஷ் என்பவர் தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ``மாஸ்க் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்தால் என்ன? கொரரோன பரவலை தடுக்க பொது இடங்களில் மாஸ்க் கையுரை அணிவது அவசியம். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தால் என்ன?

கொரோனாவினால் பாதித்தால், தானும், தன் குடும்பமும் பாதிக்கப்படுவோம் என்பதை பொது மக்கள் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையை மக்கள் கடுமையாக பின்பற்ற என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்?" என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.