தமிழ் சினிமாவில் இந்த வாரம் புது வரவாக வரும் மிகப்பெரிய திரைப்படம் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான விடுதலை படத்தின் முதல் பாகம். நடிகர் சூரி மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அதிரடி திரில்லர் படமாக உருவாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விடுதலை படத்தின் முன்பதிவு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் அப்படத்தின் எழுத்தாளர் ஜெயமோகன் நமது கலாட்டா வாய்ஸ் சிறப்பு பேட்டியில் பங்கெடுத்து விடுதலை படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதில் குறிப்பாக விடுதலை படத்தில் விஜய் சேதுபதி ஏற்று நடித்த வாத்தியார் கதாபாத்திரம் குறித்து கேட்கையில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்,

"வாத்தியார் கதாபாத்திரத்திரம் நிஜ கதாபாத்திரம்‌‌ என்று வெளிப்படையாக சொல்ல முடியாது. ஆனால் அந்த நிஜ கதாபாத்திரத்திரத்தை பார்த்திருக்கிறேன். அவர் பெரிதாக படிக்காதவர். உற்சாகமானவரான ஆளானவர் அதே நேரத்தில் மக்களுடன் மக்களாக இருக்க கூடியவராக இருந்தார். எனக்கு அப்போதே தோன்றியது இறுதியில் மாட்டி இறப்பவர்கள் எல்லாம் இப்படி கண்மூடி தனமாக எல்லொரையும் நம்பி வந்தவர்கள் தான் என்று..

எழுத்தறிவு உள்ளவர்கள், புத்தகம் படிக்க தெரிந்தவர்கள் யானையை பூனையாகவும் பூனையை யானையாகவும்‌ மாற்றி பேச தெரிந்தவர்கள். அவன் தப்பித்திடுவான் 91,92 ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் இருந்த பேச தெரிந்தவர்கள் எல்லாரும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு சென்று விட்டனர். வன்னியராக தன்னை மாற்றிக் கொண்டனர். அந்த அப்பாவித்தனம் என்பது பெரிய சக்தி. தியாகம் செய்வதற்கே ஒரு அப்பாவித்தனம் வேண்டும். அந்த அப்பாவித்தனம் அப்போது அவரிடம் இருந்தது. அதை பற்றி தான் விடுதலை கதை பேசும். 80 களில் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் சேர்ந்தவர்கள் கிராமத்தில் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும். மக்கள் பெயரை சூட்டிக்கொள்ள வேண்டும். அவர்களோடு எதாவது ஒரு வேலை பார்த்து கொண்டு இருக்க் வேண்டும் என்று இருந்தது. அப்போது 'மக்களை நோக்கி' என்ற இயக்கங்களாக இருந்தது. பின்னாடி அது வேலைக்கு ஆகவில்லை என்று விட்டுட்டு வர ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு தெரிஞ்சு கார்ல் மார்க்ஸ் நூலகம் கண்ணன் ஒருத்தர் தென்காசியில் ஒரு கிராமத்தில் மக்களோடு மக்களா இருந்தார். அதன்பின் அவர் உடல்நிலை மோசமானது. இது போன்ற பல பேரை எனக்கு தெரியும். அந்த மக்களோடு மக்களாக இருந்து பணியாற்ற கூடிய திட்டம் படிப்படியாக வேலைக்கு ஆகாமல் போனது என்பதெல்லாம் பார்த்திருக்கிறேன். அதெல்லாம் தான் இந்த விடுதலை பட அனுபவம்" என்றார் எழுத்தாளர் ஜெயமோகன்

மேலும் எழுத்தாளர் ஜெயமோகன் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..