தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விமல் நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த விலங்கு வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து விமல் நடிப்பில் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

முன்னதாக விமல் நடித்த சண்டைக்காரி திரைப்படம் நிறைவடைந்து ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், தொடர்ந்து எங்க பாட்டன் சொத்து, மஞ்சள் குடை மற்றும் குலசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் விமல் நடித்து வருகிறார். இதனிடையே விமல் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு இன்று (மே 4) வெளியானது.

உலக நாயகன் கமல்ஹாசன் தெனாலி படத்தில் பேசிய தெய்வ மச்சான் எனும் வசனம் விமலின் இந்த புதிய படத்தின் டைட்டிலாகியுள்ளது. உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் தெய்வ மச்சான் படத்தை மார்ட்டின் நிர்மல் குமார் எழுதி இயக்கியுள்ளார்.

விமலுடன் இணைந்து பால சரவணன் மற்றும் பிக்பாஸ் அனிதா சம்பத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் தெய்வ மச்சான் படத்திற்கு கேமில்.ஜே.அலெக்ஸ் ஒளிப்பதிவில் குட்வின்.ஜே.கோடன் இசை அமைக்கிறார். இந்நிலையில் தெய்வம் மச்சான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தற்போது வெளியிட்டார். அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…

Happy to share the first look of #DeivaMachan #DeivaMachanFL

Congrats @ActorVemal & @uday_Product @magic_touchpic @Bala_actor @martyn_NK17 @EditorElayaraja @dineshashok_13 @gkodan @camiljalex @Neha_Jha1795 @Vathsan_veera @rambo_vimal @Ajesh_Ashok @officialanitha @proyuvraaj pic.twitter.com/ZrO5JTG4wK

— VijaySethupathi (@VijaySethuOffl) May 4, 2022