சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

.



இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

.



விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.குழந்தையை பற்றி யார் கூறினாலும் அதுபற்றி யோசிக்கப்போவதில்லை என்று தனம் உறுதியாக இருக்கிறார்.முல்லை எடுத்துக்கூறியும் தனம் ஒத்துக்கொள்ளவில்லை

.