தமிழ் சினிமா பெரிதும் எதிர்பார்த்து நிற்கும் திரைப்படம் மணிரத்தினம் அவர்கள் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவிருக்கும் பொன்னியின் செல்வன் 2. கடந்த ஆண்டு இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று உலகளவில் வசூல் வேட்டையாடி வரவேற்பையும் பெற்று தந்தது. லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்த இப்படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா, ரகுமான்,விக்ரம் பிரபு, பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் மிக முக்கியமான கதாபத்திரங்களில் நடித்திருபார்கள். படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன், இளங்கோ குமரவேல் மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் இணைந்து திரைக்கதை வசனம் எழுதியுள்ளனர். பொன்னியின் செல்வன் ஸ்ரீகர் பிராசாத் படத்தொகுப்பு செய்ய ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார் படத்திற்கு கலை வடிவம் செய்திருப்பார் பிரபல கலை இயக்குனர் தொட்ட தரணி.

துவக்கத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை கொடுத்து நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது. இந்நிலையில் படம் வெளியாக 8 நாள் மட்டுமே உள்ள நிலையில் படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ள ‘சின்ன சிறு நிலவே’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

ஆதித்யா கரிகாலன், நந்தினிக்கும் இடையே உள்ள காதலையும் நந்தினியின் பிரிவால் வாடும் ஆதித்ய கரிகாலனின் மனநிலை சார்ந்து பாடல் உருவாகியுள்ளது. இப்பாடல் படத்தில் மிக முக்கியமான பாடலாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இப்பாடலை பின்னணி பாடகர் ஹரிசரண் பாடியுள்ளார். அனைத்து மொழியிலும் பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் இடம் பெற்றுள்ள மற்ற பாடல்களான ‘அகநக’, ‘வீர ராஜா வீரா’, ‘சிவஹோம்’ மற்றும் PS Anthem ஆகிய பாடல்கள் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று தற்போது டிரெண்ட்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.