கனவுகளோடு வரும் பல சாமானிய மக்களை பிரபலமாக்கி அவங்களுக்கு ஒரு அடையாளம் ஏற்படுத்தி கொடுக்கிறதுல சன் டிவி பல வருஷங்களா தங்களோட வேலையை சூப்பரா செஞ்சுட்டு இருக்காங்க.சன் டிவியில ஒளிபரப்பாகிட்டு இருக்க Recent சூப்பர்ஹிட் சீரியல் கண்ணான கண்ணே,அதுல ஹீரோயினா வரவங்க தான் நிமேஷிகா ராதாகிருஷ்ணன்.

ரொம்ப அழகா இருக்காங்களே,நல்ல நடிக்கிறாங்களேன்னு நிறைய நல்ல கமெண்ட்ஸ் ரசிகர்கள் சார்புல வர,அவங்கள போன்ல புடிச்சோம் அவங்க சீரியலுக்கு ஒரு வாழ்த்து சொல்லிட்டு சில கேள்விகளை முன்வைச்சோம் ரசிகர்களுக்கு தெரியாத சில பல சுவாரசியமான தகவல்களை அவங்க பகிர்ந்துக்கிட்டாங்க அதை பத்தி பார்க்கலாம் வாங்க



மீடியாவுக்குள்ள வரணும்னு ஆசை வந்தது எப்படி...?

நான் பொறந்தது Hyderabad,படிச்சது கோயம்பத்தூர் தான்,அங்க ஒரு சேனல்ல Anchor-ஆ வேலை பார்த்தேன்.எனக்கு சின்ன வயசுல இருந்து RampWalk மாடல் ஆகணும்னு ரொம்ப ஆசை.அப்போவே அதிகமா FTV பார்ப்பேன் அந்த மாதிரி நம்மளும் வரணும்னு But அது கணவாவே இருக்குது அப்படி தான் மீடியா உலகத்துல வரணும்னு ஆசை வந்தது.

அடுத்து அப்படியே ட்ராக் மாறி தான் சீரியல் சான்ஸ் திடீர்னு கிடைச்சது தான் என்னோட Friend மூலமா வந்தது முந்துன நாள் தான் நான் செலக்ட் ஆகிருக்கேன்னு சொன்னாங்க அடுத்த நாள் ஷூட்டிங்ன்னு அவசர அவசரமா போய் கலந்துக்கிட்டேன்.விஜய் டீவியோட கடைக்குட்டி சிங்கம் தான் முதல் சீரியல் சில காரணங்களால அந்த சீரியல் சீக்கிரமே முடியுற மாதிரி ஆகிருச்சு.மலையாளம்ல ஒரு சீரியல் பண்ணேன் அந்த சீரியல் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.



சீரியலில் ஹீரோயின் ஆக என்ட்ரி...ரசிகர்களோடு வரவேற்பு எப்படி இருந்தது...?

ஹீரோயினா முதல் சீரியல் அதுவும் சன் டிவி மாதிரி ஒரு பெரிய சேனல் ப்ரைம் டைம் ஸ்லாட்ன்னு எல்லாமே அமைஞ்சு வந்தது.முதல் சீரியலுக்கு நான் கதையெல்லாம் கேட்கல,இந்த சீரியல் கதை கேட்டு எனக்கு அந்த கேரக்டரும் ரொம்ப புடிச்சு போச்சு.அப்பா செண்டிமெண்ட்னாலயே Close to the Heart-ஆ இந்த சீரியல் மாறிடுச்சு.சீரியல் ஆரம்பிச்சதுல இருந்து பல பேர் அவ்ளோ பாராட்டுறாங்க,பல பேர் அவங்க வீட்டு பொண்ணு மாதிரி ட்ரீட் பன்றாங்க.மீராவா என்னை ஏத்துக்கிட்டதுக்கு ரசிகர்களுக்கு ரொம்ப நன்றி.



நீங்களும் மீரா மாதிரி silent தானா...?

வாய்ப்பே இல்லங்க Silent-ஆ இருக்கத்துக்கும் எனக்கும் ரொம்ப தூரம்...அப்பா செண்டிமெண்ட் அந்த மாதிரி சில விஷயங்கள் ஒத்து போகும் மத்தபடி நான் அமைதிலாம் கிடையாது.ரொம்ப ஜாலியான ஒரு பொண்ணு தான்.ஷூட்டிங் ஸ்பாட்லயே எல்லார் கிட்டயும் நான்தான் அதிகமா அரட்டை அடிப்பேன்.

உங்க சீரியல்ல எல்லாருமே உங்களை விட சீனியர்...அவங்க கூட நடிக்கிறது எவ்வளவு சவாலா இருந்தது...?

இவங்க கூடலாம் சேர்ந்து வேலைபார்க்க வாய்ப்பு கிடைச்சதே பெரிய வரம் தான்.பிரித்விராஜ் சார்,நித்யாதாஸ்,சுலோச்சனா அம்மா,ப்ரீத்தி சஞ்சீவ் இப்படினு எல்லாருமே பயங்கரமா நடிப்பாங்க.அவங்ககிட்ட இருந்து கத்துகிறதுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தது நிறைய கத்துக்கிட்டேன்.நடிப்புல தான் அதெல்லாம் மிச்சபடி ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லாருமே ரொம்ப சிம்பிள்,ரொம்ப ஜோவியலா எல்லாரையும் ஒரே மாதிரி ட்ரீட் பண்ணுவாங்க.



பிரித்விராஜ் சார் நிறைய படம்,சீரியல்லாம் பண்ணி ரொம்ப Experienced நடிகர்.அவர் கூட தான் நிறைய சீன்ஸ் வரும்,அவர்கூட நடிக்கிறதுனதும் ரொம்ப Nervous-ஆ இருந்தேன்,But அவரு Casual-ஆ ஜாலியா பேசி நம்மள நார்மல் ஆக்கிடுவாரு.என்னக்கு Sunlight problem உச்சி வெயில்லலாம் சுத்தமா நடிக்க வராது அப்போ எல்லாம் நிறைய டேக் எடுப்பேன் But அப்போ மட்டும் லைட்டா எல்லாரும் டென்ஷன் ஆவாங்க மத்தபடி எல்லாருமே ரொம்ப ஸ்வீட்.



ராகுல் ஏற்கனவே செம ஹிட்டான ஒரு ஹீரோ அவர் கூட நடிக்கிற அனுபவம்...?

உண்மையை சொல்லனும்னா எனக்கு ராகுல் முதல்ல யாருன்னே தெரியாது.இதுல அவரு தான் ஹீரோன்னு சொன்னதும் அப்பறம் தான் அவரோட சீரியல்லாம் பார்த்தேன்.நந்தினின்னு நேஷனல் லெவல் ரீச் இருக்க சீரியல் நடிச்சிருக்காரு.ஷூட்டிங் ஸ்பாட்ல பார்த்து பேசி இப்போ செம Friends ஆகிட்டோம்.செம கூலான ஒரு நபர் எப்பவுமே Chilled-ஆ தான் இருப்பாரு.



சோசியல் மீடியால நீங்க பெருசா ஆக்டிவ் ஆக இல்லை அதுக்கு எதுவும் காரணம் இருக்கா...?

இந்த பதிலை சொல்ற முதல் ஹீரோயின் நானா தான் இருப்பேன்னு நினைக்கிறன்,அது எனக்கு பெருசா Interest இல்ல, நான் அப்படியே பழகிட்டேன் எனக்கு சோசியல் மீடியாவுல பெருசா ஆக்டிவ் ஆக இருக்க மாட்டேன்.இன்ஸ்டாகிராமும் இப்போ ஒரு 1 வருஷமா தான் யூஸ் பண்றேன் நிறைய பேர் என்னை ஆக்டிவா இருக்க சொல்லிருக்காங்க இனிமே Try பண்றேன்.இப்போ Recent-ஆ சில வீடீயோஸ் போட ஆரம்பிச்சுருக்கேன் சீக்கிரமே Active ஆகுறேன்.நான் எதுமே போடாமலே என்னை இவ்ளோ பேர் follow பண்றது சந்தோஷமா இருக்குது.

லாக்டவுனில் பொழுதுபோக்கு...?

ஒரு வாரம் நல்ல Rest கிடைச்சது.நல்ல சாப்பிட்டுட்டு தூங்குவேன் டெய்லி ஒர்க்கவுட் பண்ணுவேன்,அப்பறம் வழக்கம் போல எதாவது ஷோ,சீரிஸ்ன்னு பார்ப்பேன்,எங்க சீரியல் டெலிகாஸ்ட் ஆகுறப்போ பார்ப்பேன்.Recent-ஆ நவம்பர் ஸ்டோரி பார்த்தேன் சூப்பரா எடுத்துருந்தாங்க.



நிமேஷிகா Traveller-ஆ...Foodie-ஆ...?

Travelling பிடிக்கும் ஆனா Long Travel பிடிக்காது.Maximum 5 மணி நேரத்துக்கு மேல போறதுனாலே எனக்கு பிடிக்காது முக்கியமா Roadways-ல.பிடிச்ச Destination பாரிஸ்,பிரான்ஸ் எல்லாம் ரொம்ப பிடிக்கும்,கனடா போகணும்னு ரொம்ப ஆசை.

Foodie-ஆ இருந்தேன் முன்னாடிலாம் நிறைய சாப்பிடுவேன்.Deserts,Sweets எல்லாம் பயங்கரமா சாப்பிடுவேன்.இப்போ ஷூட்டிங்லாம் இருக்கதுனால Variety-ஆ சாப்பிடறதெல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன்.திரும்ப பழைய Form-க்கு வரணும்.



நிமேஷிகா விரும்பி பார்க்கும் டிவி தொடர்கள்...?

Favourite ஷோ குக் வித் கோமாளி.செம Stressbuster அந்த ஷோ.அதுல சுனிதா ரொம்ப பிடிக்கும் டெய்லி பேசிட்டு இருப்பேன் வீட்டுக்கு வந்ததும் சுனிதா இதுலாம் சூப்பரா பண்ணாங்க பார்த்தியான்னு எல்லாருமே செமயா பண்ணுவாங்க செம Entertainment ஷோ அது.குக் வித் கோமாளில கூப்பிட்டாங்கன்னா உடனே போயிருவேன்.எனக்கு சமையல் பத்தி எதுவுமே தெரியாது So கோமாளியா கூப்பிட்டாலும் நான் கலந்துக்குவேன்.

நிமேஷிகாவின் மனம் கவர்ந்த ஹீரோ...?

தல அஜித் ரொம்ப பிடிக்கும்.அவரை பாக்கணும்னு சின்ன வயசுல இருந்தே கனவு , சீக்கிரம் அவரை நேர்ல பார்க்கணும்.தல அஜித் மேல தீராத ஒரு செம Craze இருக்கு.அவரை தவிர தளபதி விஜய்,மகேஷ் பாபு,அல்லு அர்ஜுன்,துல்கர் சல்மான் இவங்கள்லாம் ரொம்ப பிடிக்கும்.ஹாலிவுட்ல Theo James ரொம்ப பிடிக்கும்.



சினிமாவில் ஹீரோயின் ஆகும் கனவு இருக்கா..? ஹீரோயின் ஆனா இவர் கூட நடிக்கணும் அப்டின்னு நினைக்கிற ஒரு ஹீரோ..?

மாடல் ஆகணும்னு தான் பெரிய ட்ரீம் இருந்தது,சினிமா பத்தி நான் யோசிக்கவே இல்ல,இப்போதைக்கு Full Concentration சீரியல் தான்.நல்ல வாய்ப்புகள் வந்தால் அதையும் Try செய்து பார்க்கலாம் Why Not.அதர்வா கூட நடிக்கணும்னு ஆசை எனக்கு , அவர் ஒரு லக்கி Charm அவர்கூட நடிச்ச எல்லா ஹீரோயினுமே பெரிய ஆள் ஆகிட்டாங்க,அதே மாதிரி நமக்கும் ஏதாவது நடக்க வாய்ப்பு இருக்குல.



நம்ம கேட்ட எல்லா கேள்விக்கும் ரொம்ப ஜாலியா,கூலா பதில் சொன்ன நிமேஷிகாவுக்கு இப்போ பண்ற சீரியல் 500,1000 எபிசோடுகளை கடந்து பெரிய வெற்றியை பெறணும்னும்,அவங்க எடுத்து வைக்கிற படிகள் எல்லாமே வெற்றிப்படிகளாக அமையும்னும் கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவிச்சு Interview நிறைவு செஞ்சோம்.