தமிழ் சினிமாவில் ஸ்போர்ட்ஸ் பிலிம் என்று சொல்லப்படும் விளையாட்டு சார்ந்து வரும் திரைப்படங்கள் வெற்றி பெறுவது அரிது. அதிலும் அழுத்தமான கதையை கொண்டு பிளாக் பஸ்டர் ஹிட் கொடுப்பதெல்லாம் ஒரு தாசப்தன்களுக்கு ஒரு படம் என்று ஆகி விட்டது. அப்படி இருக்க கடந்த 2016 ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடித்து வெளியான திரைப்படம் ‘இறுதிச்சுற்று’ அட்டகாசமான கதைகளத்தில் மிரட்டலான திரைக்கதை கொண்டு வெளியான இறுதிச்சுற்று திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

நீண்ட நாளுக்கு பின் மாதவனுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படமாகவும் இந்த படத்தின் மூலம் மாதவனுக்கு கம்பேக் திரைப்படமாகவும் இறுதிச்சுற்று திரைப்படம் அமைந்தது. மேலும் ரித்திகா சிங் அவருக்கும் நல்ல அறிமுக திரைப்படமாகவும் சுதா கொங்கரா இயக்குனருக்கும் தமிழ் சினிமாவில் கவனம் கொடுத்த திரைப்படமாகவும் இறுதிச்சுற்று திரைப்படம் இருந்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்த இந்த நிலையில் இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் நடிகர் மாதவன் அவர்களை அழைத்து தடபுடலான விருந்து ஒன்றை வழங்கியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், வங்கை அன்னம், பொடி சாம்பார், வத்த குழம்பு, தயிர் சாதம் உள்ளிட்ட உணவு வகைகளை இரண்டு தசாப்தங்களாக தொடரும் நட்பு மாதவனுக்கு தான் பரிமாறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது பதிவினை மாதவன் பகிர்ந்து பகிர்ந்து "நீங்கள் ஒரு அசாத்தியமான இயக்குநர் மட்டுமல்ல பிரமாதமான சமையலாளர் என்பதையும் தெரிந்து கொண்டேன். உங்கள் கைகளால் உங்கள் இல்லத்தில் எனக்கு நீங்கள் பரிமாறுவது கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.. நன்றி சுதா..” என்று பதிவிட்டு நன்றியினை தெரிவித்துள்ளார்.

When your extraordinary Director turns out to be an equally extraordinary, cook and host.. serves you with her own hands and in a beautiful beautiful home .. you know you have done some things right … thanks Sudhaaaaaaaa https://t.co/BZy2VV3vPE

— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 14, 2023

கடந்த 2004 ல் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் மிக முக்கியமான் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்திருப்பார். அதில் உதவி இயக்குனராக சுதா கொங்கரா பணிபுரிந்தார். அந்த படத்தில் இருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சுதா கொங்கரா அவர்களின் தடபுடலான விருந்து புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.