தெலகானவில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடுத்தடுத்து எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த மாநிலத்தையே உலுக்கி உள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அருகே உள்ள ஷாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த 26 வயதான பிரியங்கா ரெட்டி என்ற இளம்பெண், அங்குள்ள கொல்லூர் அரசு மருத்துவமனையில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு 4 காமூகர்களால் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் எரித்துக்கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக, ஒரே நாளில் கைது செய்தனர்.

இந்நிலையில், அந்த பலாத்கார கொலையின் ஈரம் காய்வதற்குள், அதேபகுதியில், அதேபோன்ற மற்றொரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் இன்று நடந்துள்ளது, அந்த மாநிலத்தையே உலுக்கி உள்ளது.

பிரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட ஷம்ஷாபாத் பகுதியிலிருந்து மிகச் சரியாக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், சுமார் 35 வயது மதிக்கத்தக்கப் பெண்ணை, சிலர் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அந்த பெண்ணை உயிரோடு எரித்து கொலை செய்துள்ளனர்.

பிரியங்கா ரெட்டியின் உடலைப்போன்றே, இந்த உடலும் பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனையடுத்து, விரைந்து உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாகத் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதை அடையாளம் காணும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, பிரியங்கா ரெட்டியைப் பலாத்காரம் செய்து கொலை செய்த, அந்த 4 பேரே, இந்த கொலையையும் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர்களிடம் இந்த கொலை தொடர்பாகவும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தெலங்கனால், அடுத்தடுத்து பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அந்த மாநிலத்தையே அதிர வைத்துள்ளது. இதனால், அந்த மாநிலத்தில் உள்ள பெண்கள் கடும் அச்சத்திலேயே உரைந்துபோய் உள்ளனர்.
தற்போது, இந்த 2 பெண்களின் பலாத்கார கொலை வழக்கை, தேசிய பெண்கள் ஆணையம் கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.