சென்னையில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், சித்த மருத்துவத்தின் துணையுடன் அதனைக் குணப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடங்கி உள்ளன.

கொரோனா என்னும் கொடிய வைரஸ், உலகத்தையே ஆட்டி படைத்து வரும் நிலையில், அதற்கு மருந்து கண்டுப்பிடிக்கம் பணிகள் முழு வீச்சில் நடைபெற்ற வருகிறது.

தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் கொரோரோனா என்னும் கொடிய வைரஸ் உக்கிர தாண்டவமாடி வருகிறது.

இதனிடையே, கொரோனாவுக்கு ஆங்கில மருத்துவம் மூலம் மட்டுமே இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அலோபதி மருத்துவத்துடன் சித்த மருத்துவமும் இணைந்து கொரோனா வைரசை, 5 நாட்களுக்குள் குணப்படுத்துவதற்கான பணிகள், சென்னையில் தற்போது தொடங்கி உள்ளன.

சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் 73 கொரோனா தொற்று பரவிய நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது உணவே மருந்து என்ற அடிப்படையில் சித்த மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, உணவே மருந்து என்ற மருத்துவ முறையின்படி, சித்த மருந்துக்கள் அடங்கிய உணவுகள் தினமும் 3 வேளையும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக கபசுர குடிநீர், அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட 15 வகையான மூலிகைப் பொருட்கள் அடங்கிய கசாயம் மற்றும் தேநீர் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், 4 நாட்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, 5 வது நாள் மீண்டும் கொரோனா நோயாளிக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சித்த மருத்துவம் மற்றும் அலோபதி முறையில் அளிக்கப்படும் சிகிச்சை முறை, பலன் அளிக்கும் பட்சத்தில், இது உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும் இருக்கம் என்றும், இதன் மூலம் சித்த மருத்துவ முறை உலக முழுவதும் பரவும் என்றும் கூறப்படுகிறது.