தன் மீதான பாலியல் புகார் 2002க்கு முன்பு நடந்தவை” என்று கூறுமாறு பக்தர்களுக்கு நித்யானந்தா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர் நித்யானந்தா என்பதை, அவரே மீண்டும் நிரூபித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செயல்பட்டு வந்த நித்தியானந்தா ஆசிரமத்தில், தனது 4 மகள்களை அடைத்து வைத்து, பார்க்க அனுமதி மறுப்பதாகப் பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், நித்தியானந்தாவுக்கு எதிராகக் குஜராத், பெங்களூர் மற்றும் சென்னை நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது.

அத்துடன், நித்யானந்தா மீது ஆள் கடத்தல், பாலியல் புகார் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த சர்ச்சைகளைப் பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாத நித்யானந்தா, நேற்று மீண்டும் தனது பக்தர்களுக்கு இணையம் வழியாகச் சத்சங்கம் பேசினார். அப்போது, தன்னை தானே அவர் மேற்கொள் காட்டினார்.

அதன்படி, “ஒரு நல்ல தலைவன் எப்படி இருக்க வேண்டும்?” என்பது பற்றிப் பேசிய அவர், அதற்குத் தன்னை தானே அவர் உதாரணம் சொல்லி பேசினார்.

“பல விஷயங்களில் ஜெயித்த போராளி நான். நெத்தியடி போல், சீடர்களாகிய நீங்கள் எல்லாம் எதிர் கருத்து கூறுபவர்களுக்கு நித்தியடி கொடுக்க வேண்டும். நித்தியடி என்றால் என்ன தெரியுமா?

பாலியல் புகார் வழக்கில் நான் ஏற்கனவே கைது செய்யப்பட்டபோது, புகார் தருபவர்களைக் கூவி கூவி போலீசார் தேடினர். ஆனால், கிடைக்கவில்லை” என்பதுபோல் கையை காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் வீடியோ பதிவாக உள்ளது. இதனால், என் மீதான பாலியல் புகார்கள், எடுபடாமல் போய்விடும்.

என்னைப் பற்றி பாலியல் புகார் கூறுபவர்களிடம், அது 2002க்கு முன்பு நிகழ்ந்த குற்றம் எனப் புகார் கொடுங்கள்” என்று வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும் கூறி அனைவரையும் நித்யானந்தா அதிர்ச்சியடைய வைத்தார்.