தமிழகத்தின் சிகப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் எதுவென்று தற்போது பார்க்கலாம்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் சிகப்பு மண்டலங்களாகவும், கொரோனா பாதிப்பு சற்று குறைவாக உள்ள பகுதிகள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகள் அனைத்தும் பச்சை மண்டலங்களாகவும் மத்திய - மாநில அரசுகள் வகைப்படுத்தி உள்ளன.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் ஒரு பச்சை மாவட்டமும், 24 ஆரஞ்சு மாவட்டங்களும், 12 சிகப்பு மாவட்டங்களும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த பட்டியலில் தமிழகத்தில் ஒரு மாவட்டமாக கிருஷ்ணகிரி மட்டுமே பச்சை மண்டலங்கள் இருந்த நிலையில், இன்று அந்த மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறி உள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் தற்போது ஒரு மாவட்டம் கூட பச்சை மண்டலத்தில் இடம் பெறவில்லை.

மேலும், ஆரஞ்சு மண்டலங்களின் பட்டியில் திருச்சி, தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகை, தென்காசி, திண்டுக்கல், விழுப்புரம், கோவை, கடலூர், சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், திருநெல்வேலி, நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

அதேபோல் சிகப்பு மண்டலங்கள் பட்டியில், சென்னை, திருப்பூர், மதுரை, செங்கல்பட்டு, நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விருதுநகர், வேலூர் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

கொரோனா பாதிப்பால் தற்போது 3 வது முறையாக மே 17 ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மண்டலங்களின் அடிப்படையிலேயே சில தளர்வுகள் மற்றும் சலுகைகள் கிடைக்கும் என்றும் மத்திய - மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.