ஜகஜால கில்லாடி பெண், இளைஞரை ஏமாற்றி 2வது திருமணம் செய்துள்ளார்.

பெண், ஆணுக்குக் கொஞ்சமும் சளித்தவள் இல்லை!

கோவை பொள்ளாச்சி ஆறுமுகநேரியைச் சேர்ந்த மணிகண்டன், திருமணத்திற்குப் பெண் தேடி உள்ளார். அப்போது, வால்பாறையில் பெண் இருப்பதாக நண்பர் ஒருவர் கூறியதையடுத்து, பெண் பார்க்கச் சென்றுள்ளார்.

அதன்படி, வால்பாறையில் சுரேஷ் ஆனந்தன் என்பவரின் மகள் சோபியாவை பெண் பார்த்துப் பிடித்துவிடவே, கடந்த செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து, திருமணம் நடைபெற்ற அடுத்த 4 நாட்களில், சோபியா தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். இதனால், பயந்துபோன மணிகண்டன், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சோபியாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கருவுற்று இருப்பதாகத் தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த மணிகண்டன், சோபியாவிடம் விசாரித்துள்ளார். அப்போது, தனக்கு ஏற்கனவே, வால்பாறையைச் சேர்ந்த தயாளன் என்பவருடன் திருமணம் நடைபெற்றதாகக் கூறியுள்ளார்.

இதனால், மேலும் அதிர்ச்சியடைந்த மணிகண்டன், முதல் கணவரை ஏமாற்றி விவாகரத்து பெறாமல், தன்னையும் ஏமாற்றி 2 வதாக திருமணம் செய்த இளம்பெண் மீது, அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சோபியா பணம் மற்றும் நகைக்கு ஆசைப்பட்டுப் பெற்றோருடன் சேர்ந்து திட்டம்போட்டு, மணிகண்டனை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், ஏமாற்றுதல் மற்றும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சோபியா மற்றும் அவரின் பெற்றோர்கள், சகோதரர்கள் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சோபியாவை தேடிவருகின்றனர்.

இதனிடையே, இளைஞரை ஏமாற்றி பெண் ஒருவர் 2வது திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆணுக்குக் கொஞ்சமும் சளித்தவள் இல்லை பெண் என்பது, இதன் மூலம் நிரூபணம் ஆகிறது.