ஒடிசாவில் காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஓடிசா மாநிலம் ஜகட்பூரி பகுதியைச் சேர்ந்த அலேக் பரிக், அங்குள்ள பக்ரி சஹி என்னுமிடத்தில், தன் காதலியுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். சிறுது நேரத்தில் அவர்களுக்குள் லேசான வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை, காதலன் மீது ஊற்றி விட்டு, மின்னல் வேகத்தில் அந்த பெண் தலைமறைவானார்.

முகத்தில் ஆசிட் பட்டத்தில், அலறித்துடித்த அலேக் பரிக், அங்கேயே கீழே விழுந்து வலியால் துடித்துக்கொண்டிருந்தார். அப்போது, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து கேட்டபோது, தன் மீது, குறிப்பிட்ட அந்த பெண் ஆசிட் வீசிவிட்டுத் தப்பி ஓடியுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதனையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்த விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஆசிட் வீச்சுக்கு ஆளானவர் கூறும்போது, “என்னை அந்த பெண் காதலிக்கிறாள். ஆனால், நான் காதலிக்க மறுத்ததால், என் மீது ஆசிட் வீச்சிவிட்டு சென்றுவிட்டாள்” என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில், இருவரும் காதலிப்பதாகவும், அடிக்கடி இருவரும் இதுபோன்று தனிமையில் சந்தித்துப் பேசுவார்கள் என்றும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால், போலீசார் குணமடைந்துள்ளனர்.

இதனிடையே, காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம், ஒடிசாவில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.