டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் விற்கப்படவுள்ள மதுபானங்களின் விலைப்பட்டியலைத் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், மதுபானங்களின் விலையை 20 ரூபாய் வரை, தமிழக அரசு உயர்த்தி உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, 40 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது 3 வது முறையாக மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த 4 ஆம் தேதி முதல் பல்வேறு இடங்களில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அதன்படி, கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டது.

இதனிடையே, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு, கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

இதனையடுத்து, நடுத்தர மற்றும் பிரீமியம் வகை மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை 20 ரூபாய் உயர்கிறது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கிற்குப் பிறகு இன்று முதல் டாஸ்மாக் திறக்கப்பட உள்ள நிலையில், மதுபானங்களின் புதிய விலை பட்டியல் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சாதாரண வகை 180 மில்லி மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை 10 ரூபாய் உயர்ந்து, 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேபோல், சாதாரண வகை 375 மில்லி மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை 240 ரூபாயாகவும், 750 மில்லி மதுபான பாட்டிலின் விலை 480 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால், அது தொடர்பாக புகாரளிக்கவும் தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து, காலை 10 மணி அளவில் திமுக கூட்டணி கட்சியினர் கருப்புச்சின்னம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, தமிழக அரசுக்கு கடந்த 2019 - 2020 ஆம் நிதியாண்டில், டாஸ்மாக் வழியாக 31 ஆயிரத்து 157 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைத்துள்ள குறிப்பிடத்தக்கது. மதுபான வகைகளின் விலைப்பட்டியல்