மகளை விவகாரத்துக்குத் தூண்டிய மாமியாரையும் மனைவியையும் கணவன் கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவை சேர்ந்த 43 வயதான அமித் அகர்வால், தனது மனைவி மற்றும் 10 வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

அப்போது கணவன் - மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து பெறும் நிலைக்கு வந்துள்ளனர். அத்துடன், கொல்கத்தாவில் உள்ள மாமியார் விவகாரத்து பெற்றுப் பிரிந்து வந்துவிடும்படி தன்னுடைய மகளைக் கட்டாயப்படுத்தி உள்ளார்.

இதனைத்தொடர்ந்து, விவகாரத்து தரும்படி அமித் அகர்வாலை அவருடைய மனைவி தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அமித் அகர்வால், பெங்களூருவில் உள்ள தனது மனைவியைக் கொலை செய்துள்ளார்.

அப்போது, விவகாரத்து கேட்க சொன்து தனது மாமியார் என்பது அமித் அகர்வாலுக்கு தெரியவந்தது. இதனால், இன்னும் கோபமடைந்த அமித் அகர்வால், அங்கிருந்து நேராகக் கொல்கத்தாவில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார்.

அங்கு, மாமியாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், கடும் ஆத்திரமடைந்த அமித் அகர்வால், திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மாமியாரைச் சுட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

இதனைப்பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த 70 வயதான மாமனார், பதறிப்போய் அங்கிருந்து தப்பி வீட்டை விட்டு வெளியே ஓடிவந்துள்ளார். பின்னர், வீட்டின் கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்டுள்ளார். மேலும், போலீசாருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து விரைந்து வந்த போலீசார், கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அமித் அகர்வாலும் தன்னை தானே சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து, இருவரின் உடல்களையும் போலீசார் மீட்கும்போது, அமித் அகர்வால் பையில் ஒரு கடிதம் இருந்தது. அதைப் படித்தபோது, விவகாரத்து கேட்ட என் மனைவியைப் பெங்களூருவில் கொலை செய்து விட்டு, 2 வதாக மாமியாரைக் கொலை செய்யக் கொல்கத்தா வந்ததாக” அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, பெங்களூரு காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் நேரில் சென்று பார்த்துள்ளனர். அங்கு அமித் மனைவி கொலை செய்யப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. அத்துடன், அமித்தின் 10 வயது மகன் பாதுகாப்பாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலைகளுக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, விவகாரத்து கேட்ட மனைவியை பெங்களூரில் கொலை செய்துவிட்டு, கொல்கத்தா சென்று மாமியாரையும் கொலை செய்து, தானும் தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.