“போலீசாரிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று டெல்லி ஜே.எம்.இ.பல்கலைக்கழக மாணவர்கள் கதறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அது விரைவில் சட்டமாக வர உள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களும் அதனால், வன்முறைகளும் வெடித்துள்ளன.

அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு இதுவரை 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று டெல்லியில் ஜே.எம்.இ.பல்கலைக்கழக மாணவர்கள், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தின் குதித்தனர்.

அப்போது, அங்கு வந்த போலீசார், கண்ணில் பட்ட மாணவர்கள் மீது கொலை வெறித்தோமாக தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், போராட்டம் நடத்திய மாணவர்கள் உயிர் பயத்தில் ஜே.எம்.இ.பல்கலைக்கழகத்திற்குள் தஞ்சமடைந்தனர்.

அப்போது, அத்துமீறி ஜே.எம்.இ. பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த போலீசார், அங்கும் மாணவர்கள் மீது கொலை வெறித் தனமாகத் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், பெரும்பாலான மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட அறையில் பதுங்கிகொண்டதால், போலீசார் குண்டர்களைப் போல் செயல்பட்டு, கொலை வெறியுடன் மாணவர்களைத் தேடி அலைந்துள்ளனர். இதனால், பயந்துபோன மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள மின்சாரத்தைத் துண்டித்து, விளக்குகளை அணைத்தபடியே, பதுங்கிருந்தனர்.

This was what was apparently happening at Jamia Milia Islamia some moments ago. @TheQuint pic.twitter.com/6A4Nwyf68B

— Kabir Upmanyu (@kabirupmanyu) December 15, 2019

இதனால், மாணவர்கள் பதுங்கியிருப்பதாகக் கருதப்பட்ட அறைகளுக்குள் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், மாணவர்கள் மூச்சு விட முடியாமல் உயிருக்குப் போராடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

போலீசாரின் மனித உரிமை மீறிய அந்த செயல் தொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், போலீசாருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.